< Back
மாநில செய்திகள்
மதுரையில் வங்கியிலிருந்து இருந்து தங்க கவசம் பசும்பொன் சென்றது
மாநில செய்திகள்

மதுரையில் வங்கியிலிருந்து இருந்து தங்க கவசம் பசும்பொன் சென்றது

தினத்தந்தி
|
26 Oct 2022 3:44 PM GMT

மதுரை அண்ணா நகர் வங்கியில் இருந்து டிஆர்ஓ பெற்று விழா குழுவினரிடம் தங்க கவசத்தை ஒப்படைத்தார்.

மதுரை:

விடுதலைப் போராட்ட வீரர் முத்துராமலிங்க தேவர் சிலையின் தங்க கவசம் மதுரை அண்ணாநகர் பகுதியில் உள்ள வங்கியில் அதிமுக மற்றும் பசும்பொன் தேவர் நினைவாலயம் ஆகியோரின் பெயரில் லாக்கரில் வைக்கப்பட்டுள்ளது.

வருடம் தோறும் அக்டோபர் 30ஆம் தேதி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பிறந்த நாளை முன்னிட்டு 3 தினங்களுக்கு முன்பாக தங்க கவசத்தினை வங்கியில் இருந்து எடுத்துச் சென்று பசும்பொன்னில் அமைந்துள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு அணுவித்து பின் மீண்டும் வங்கி லாக்கரில் வைப்பது வழக்கம்.

இந்தநிலையில் எடப்பாடி பழனிசாமி தரப்பினர், அ.தி.மு.க.வில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கியதால், தங்க கவசத்தை வங்கியில் இருந்து யார் பெறுவது என்பதில் குழப்பம் ஏற்பட்டு உள்ளது.

இதை தொடர்ந்து இன்று இந்த வழக்கில் கோர்ட்டு தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் அதிமுக உட்கட்சி பிரச்சினையில் நீதிமன்றம் தலையிட இயலாது. அதிமுக சார்பில் வழங்கிய தங்கக்கவசத்தை ராமநாதபுரம் டிஆர்ஓ வங்கியில் இருந்து எடுத்துச்சென்று அணிவிக்க வேண்டும்.

தங்கக்கவசம் அணிவிக்கப்பட்ட பின் மீண்டும் வங்கியில் ஒப்படைக்கவும் ராமநாதபுரம் டி.ஆர்.ஓ.வுக்கு அதிகாரம் வழங்கி நீதிபதி உத்தரவிட்டுள்ளார். தங்க கவசத்திற்கு ராமநாதபுரம் காவல்துறையினர் தகுந்த பாதுகாப்பு வழங்கவும் மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் கமுதி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் உள்ள தேவர் சிலைக்கு அதிமுக சார்பில் வழங்கப்பட்ட தங்க கவசம், மதுரை அண்ணா நகர் வங்கியில் இருந்து டிஆர்ஓ பெற்று விழா குழுவினரிடம் தங்க கவசத்தை ஒப்படைத்தார். அவர்கள் பெற்றுக் கொண்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பசும்பொன் கொண்டு சென்றனர்.


மேலும் செய்திகள்