< Back
மாநில செய்திகள்
வெறிநாய்கள் கடித்து 20 ஆடுகள் செத்தன
நாமக்கல்
மாநில செய்திகள்

வெறிநாய்கள் கடித்து 20 ஆடுகள் செத்தன

தினத்தந்தி
|
16 Jun 2023 12:15 AM IST

எருமப்பட்டி

எருமப்பட்டி அருகே உள்ள பொட்டிரெட்டிப்பட்டி ஊராட்சி கெஜப்கோம்பை பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம். இவர் 10 ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்தநிலையில் இவரது தோட்டத்தில் ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டிருந்தார். அப்போது அங்கு வந்த வெறிநாய்கள் ஆட்டை கடித்ததால் இறந்தது. இதேபோல் அதே பகுதியில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 20-க்கும் மேற்பட்ட ஆடுகளை வெறிநாய்கள் கடித்து குதறியதால் செத்தன. மேலும் ஞானசேகரன் என்பவர் வளர்த்து வந்த 15 நாட்டுக்கோழிகளை தெருநாய்கள் கடித்து குதறின. இதனால் கால்நடைகளை வளர்ப்பவர்கள் வயல்வெளிகளில் அவைகளை மேய்ச்சலுக்கு விட முடியாமல் அச்சப்படுகின்றனர். இதனால் அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் வெறிநாய்களை பிடிக்க அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இறந்த ஆடுகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் செய்திகள்