விழுப்புரம்
சிறுமி பாலியல் பலாத்காரம்
|திண்டிவனத்தில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த ஆட்டோ டிரைவர்கள் 3 பேர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
திண்டிவனம்,
ஆட்டோ டிரைவருடன் காதல்
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள வீரணாமூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்லப்பெருமாள் மகன் சிம்பு (வயது 19). ஆட்டோ டிரைவரான இவருக்கும் திண்டிவனம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, ஒருவரையொருவர் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
அப்போது சிம்பு, சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி பலமுறை உல்லாசம் அனுபவித்து வந்ததாக தெரிகிறது.
பலாத்காரம்
இந்த நிலையில் சிம்பு தன்னுடன் ஆட்டோ ஓட்டி வரும் சக டிரைவர்களான திண்டிவனம் அடுத்த பட்டணம் கிராமத்தை சேர்ந்த சிவா(21), செல்வம் ஆகியோருடன் சேர்ந்து நேற்று முன்தினம் இரவு அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
இதில் உடல் நலம் பாதிக்கப்பட்ட சிறுமி திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரியில் நேற்று காலை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுபற்றி டாக்டர்கள் திண்டிவனம் மகளிர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து சிறுமியிடம் நடத்திய விசாரணையில், சிம்பு உள்ளிட்ட 3 பேர் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.
3 பேர் கைது
இதுகுறித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிந்து, சிம்பு உள்ளிட்ட 3 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 2 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த சம்பவம் திண்டிவனம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.