< Back
மாநில செய்திகள்
பெண் தீக்குளிக்க முயற்சி
மயிலாடுதுறை
மாநில செய்திகள்

பெண் தீக்குளிக்க முயற்சி

தினத்தந்தி
|
13 March 2023 12:15 AM IST

துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு பெண் தீக்குளிக்க முயற்சி சீர்காழியில் பரபரப்பு

சீர்காழி:

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி திருவந்தி கட்டளை தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவருக்கு முருகேசன் என்ற மகனும், முத்துலட்சுமி என்ற மகளும் உள்ளனர். சம்பவத்தன்று முத்துலட்சுமி மற்றும் அவருடைய அண்ணன் முருகேசனுக்கும் இடையே சொத்து தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது முருகேசன் முத்துலட்சுமி மற்றும் அவரது மகளை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த முத்துலட்சுமி தனது மகளுடன் சீர்காழி துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி மண்எண்ணெய் கேனை பிடுங்கி சமாதானம் செய்தனர். அப்போது முத்துலட்சுமி தன்னையும், தனது மகளையும் தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்