< Back
மாநில செய்திகள்
சினிமா உதவி இயக்குனரை கத்தியால் வெட்டி காரை பறித்து சென்ற கும்பல்
சென்னை
மாநில செய்திகள்

சினிமா உதவி இயக்குனரை கத்தியால் வெட்டி காரை பறித்து சென்ற கும்பல்

தினத்தந்தி
|
18 Nov 2022 9:59 AM IST

சினிமா உதவி இயக்குனரை வெட்டி கார், செல்போனை பறித்து சென்ற கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னை கொளத்தூர் புத்தகரம் லட்சுமி அம்மாள் நகரைச் சேர்ந்தவர் சிபி (வயது 30). இவர், சினிமாவில் உதவி இயக்குனராக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் இவருடைய நண்பர் ஒருவர், ஊரப்பாக்கத்தில் ஒரு வீட்டில் 3 அழகிகள் இருப்பதாக தெரிவித்தார். அதை நம்பிய சிபி, கொளத்தூரில் இருந்து காரில் ஊரப்பாக்கத்தில் அழகிகள் தங்கி இருப்பதாக கூறிய வீட்டுக்கு சென்றார்.

ஆனால் அந்த வீட்டில் அழகிகள் யாரும் இல்லை. அவரது நண்பர் மற்றும் 3 பேர் அங்கு இருந்தனர். அவர்கள் உதவி இயக்குனர் சிபியை கத்தியால் வெட்டி விட்டு, அவரது கார் மற்றும் அவரிடம் இருந்த செல்போனை பறித்துக்கொண்டு தப்பிச்சென்று விட்டனர்.இதில் காயம் அடைந்த சிபியை அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இது குறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து சினிமா உதவி இயக்குனர் சிபியை கத்தியால் வெட்டிவிட்டு காரை பறித்து சென்றவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்