< Back
மாநில செய்திகள்
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 26,000 கன அடியாக நீடிப்பு
மாநில செய்திகள்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 26,000 கன அடியாக நீடிப்பு

தினத்தந்தி
|
4 Nov 2022 4:07 AM GMT

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 26,000 கன அடியாக நீடிக்கிறது.

சேலம்,

காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், இன்று காலை நீர்வரத்து 4-வது நாளாக வினாடிக்கு 26,000 கன அடியாக நீடிக்கிறது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 21,500 கன அடி வீதம் நீர்மின் நிலையங்கள் வழியாகவும் வெள்ள நீர் வினாடிக்கு 4,500 கன அடி வீதம் உபரிநீர் போக்கி வழியாகவும் திறக்கப்பட்டு வருகிறது.

கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 750 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இன்று காலை 24-வது நாளாக மேட்டூர் அணை நீர்மட்டம் தொடர்ந்து 120 அடியாக நீடித்து வருகிறது. அணையின் நீர் இருப்பு 93.47 டி.எம்.சியாக உள்ளது.

மேலும் செய்திகள்