< Back
மாநில செய்திகள்
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 15 ஆயிரத்து 500 கன அடியாக சரிவு
மாநில செய்திகள்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 15 ஆயிரத்து 500 கன அடியாக சரிவு

தினத்தந்தி
|
17 Nov 2022 10:34 AM IST

அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுவதால் அணையின் நீர்மட்டம் கடந்த சில நாட்களாக 120 அடியாக நீடிக்கிறது.

சேலம்,

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பதும் குறைவதுமாக உள்ளது. மேட்டூர் அணைக்கு நேற்று காலை 17,500 கன அடி தண்ணீர் வந்தது. இன்று நீர்வரத்து மேலும் சரிந்து 15,500 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

அணையில் இருந்து விநாடிக்கு 17,000 கன அடி தண்ணீரும், கால்வாயில் 500 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டு வந்தது. அணைக்கு நீர்வரத்து சரிந்ததை அடுத்து தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி டெல்டா பாசனத்துக்கு 15000 கன அடி தண்ணீரும், கிழக்கு, மேற்கு கால்வாயில் 500 கனஅடி கண்ணீரும் என மொத்தம் 15 ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுவதால் அணையின் நீர்மட்டம் கடந்த சில நாட்களாக 120 அடியாக நீடிக்கிறது.

மேலும் செய்திகள்