< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 9,500 கன அடியாக அதிகரிப்பு..!
|11 Oct 2023 11:26 AM IST
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 9,500 கன அடியாக அதிகரித்துள்ளது.
ஒகேனக்கல்,
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை மற்றும் கர்நாடக அணைகளில் திறந்து விடப்பட்ட தண்ணீர் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 6,000 கன அடியில் இருந்து 9,500 கன அடியாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக ஒகேனக்கல்லில் உள்ள மெயினருவி, சினிபால்ஸ், ஐந்தருவி ஆகிய அருவிகளில் தண்ணீர் சீறிபாய்ந்து செல்கிறது.
கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறந்து விடப்பட்ட தண்ணீரின் அளவை பிலிக்குண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மேலும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 2,528 கன அடியாக அதிகரித்துள்ளது.
கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ் சாகர் அணைகளில் இருந்து தமிழ்நாட்டிற்கு 2-வது நாளாக 5,500 கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.