நாகப்பட்டினம்
கடலில் தத்தளித்த மீனவர்கள் கரை திரும்பினர்
|கடலில் தத்தளித்த மீனவர்கள் கரை திரும்பினர்
வேதாரண்யத்தை அடுத்த கோடியக்காடு பகுதியை சேர்ந்த
நவாப்கான் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் கோடியக்காடு பகுதியை சேர்ந்த வீரமணி(வயது50), பொதுவுடை (30) செல்வராஜ்(25), காளி (22) ஆகிய 4 மீனவர்களும் நேற்றுமுன்தினம் கோடியக்கரையில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் மீன்பிடித்து விட்டு கரை திரும்பாததால் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து உடனடியாக மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கடலில் காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் திசைமாறி மீனவர்கள் சென்றதும், டீசல் தீர்ந்துவிட்ட நிலையில் பல மணிநேரம் கடலில் தத்தளித்ததும் தெரியவந்தது. இந்தநிலையில் கடலில் தத்தளித்த மீனவர்கள் அந்த வழியாக சென்ற படகில் டீசல் வாங்கி, தங்கள் படகை இயக்கி கோடியக்கரை கடற்கரைக்கு பத்திரமாக படகுடன் வந்து சேர்ந்தனர். மீனவர்கள் பத்திரமாக கரை திரும்பியதையடுத்து மீனவர்களின் குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.