< Back
மாநில செய்திகள்
மயிலாடுதுறை: சுருக்குமடி வலை பயன்படுத்தியவர்களின் படகை சிறைபிடித்த மீனவர்கள்
மாநில செய்திகள்

மயிலாடுதுறை: சுருக்குமடி வலை பயன்படுத்தியவர்களின் படகை சிறைபிடித்த மீனவர்கள்

தினத்தந்தி
|
1 Aug 2023 11:31 PM IST

தரங்கம்பாடியில், தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலை பயன்படுத்தியவர்களின் படகை சிறைபிடித்த மீனவர்கள், வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை,

மயிலாடுதுறை மாவட்டத்தில் சுருக்குமடி வலைகளுக்கு பூம்புகார் மற்றும் சில மீனவ கிராமங்கள் ஆதரவாகவும், தரங்கம்பாடியை சேர்ந்த 21 மீனவ கிராமங்கள் எதிர்ப்பாகவும் உள்ளனர்.

இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்ட கடல் எல்லைக்குள் சுருக்குமடியை பயன்படுத்தி மீன் பிடித்ததாக 3 மீனவர்களையும், படகையும் தரங்கம்பாடி மீனவர்கள் சிறை பிடித்து கரைக்கு கொண்டு வந்தனர். அவர்களை போலீசார் அழைத்துச் சென்ற நிலையில், உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி, 21 கிராம மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

அதே நேரத்தில், தரங்கம்பாடி மீனவர்களின் குற்றச்சாட்டுகளுக்கு, சந்திரப்பாடி மீனவர்கள் மறுப்பு தெரிவித்துள்ளதோடு, மீனவர்களை கடத்தி சென்றதாக குற்றம் சாட்டியுள்ளனர். இன்று, மீன்வளத்துறை அதிகாரிகள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெறும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்