< Back
மாநில செய்திகள்
மீன் பிடிக்கச் சென்றபோது கடலில் தவறி விழுந்து மீனவர் பலி
செங்கல்பட்டு
மாநில செய்திகள்

மீன் பிடிக்கச் சென்றபோது கடலில் தவறி விழுந்து மீனவர் பலி

தினத்தந்தி
|
12 Sept 2022 3:40 PM IST

மீன் பிடிக்கச் சென்றபோது கடலில் தவறி விழுந்து மீனவர் இறந்தார்.

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அடுத்த கடப்பாக்கம் தண்டு மாரியம்மன் கோவில் அடுத்த ஆலம்பரை குப்பத்தைச் சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகன் முருகன் (வயது 40). இவர் நேற்று மதியம் படகு மூலம் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற நிலையில், கடலில் தவறி விழுந்து இறந்தார்.

பின்னர் சக மீனவர்கள் அவரது உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இது குறித்து தகவல் அறிந்த சூனாம்பேடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சகாதேவன் அங்கு சென்று முருகன் உடலை மீட்டு மதுராந்தகம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக சூனாம்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பலியான முருகனுக்கு ஒரு மகன், 2 மகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்