< Back
மாநில செய்திகள்
கடலில் தவறி விழுந்து மீனவர் பலி
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

கடலில் தவறி விழுந்து மீனவர் பலி

தினத்தந்தி
|
15 Feb 2023 12:15 AM IST

தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் கடலில் தவறி விழுந்து மீனவர் பலி

புதுக்கடை,

தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் குமரி மாவட்டத்தை சேர்ந்த மீனவர்களும் கேரள மாநிலத்தை சேர்ந்த மீனவர்களும் படகுகள் மூலம் மீன்பிடித்து வருகின்றனர். கேரள மாநிலத்தைச் சேர்ந்த சகாயம் (வயது45) என்ற மீனவர் தேங்காப்பட்டணம் துறைமுகப் பகுதியில் மீன் பிடித்து வருகிறார். இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலையில் படகு அணையும் தளத்தில் படகை நிறுத்திவிட்டு வெளியே வந்தார். பின்னர் கரை ஓரத்தில் நின்று ெகாண்டிருந்த போது திடீரென கால் தவறி கடலில் விழுந்தார். இதில் எதிர்பாராமல் கடலில் மூழ்கினார். இதைபார்த்த சக மீனவர்கள் ஓடிவந்து கடலுக்குள் இறங்கி அவரை மீட்க முயன்றனர். ஆனால் முடியவில்லை.

இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கும், புதுக்கடை போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து ஒரு மணி நேரம் போராடி சகாயத்தை பிணமாக மீட்டனர். பின்னர் போலீசார் உடலை கைப்பற்றி குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்