< Back
மாநில செய்திகள்
பாம்பு கடித்து மீனவர் சாவு
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

பாம்பு கடித்து மீனவர் சாவு

தினத்தந்தி
|
18 Jan 2023 6:45 PM GMT

பாம்பு கடித்து மீனவர் சாவு உயிரிழந்தார்.

தொண்டி,

தொண்டி அருகே உள்ள பாசிப்பட்டினம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 26). மீனவரான இவர் சம்பவத்தன்று ஊரில் உள்ள குலதெய்வம் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டுவிட்டு கடற்கரை வழியாக வீட்டுக்கு திரும்பி கொண்டு இருந்தார். அப்போது அவரை பாம்பு ஒன்று கடித்தது. இதையடுத்து முத்துக்குமாரை அவரது உறவினர்கள் மீட்டு ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து எஸ்.பி.பட்டினம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்