< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
இல.கணேசன் இல்ல விழாவில் பங்கேற்ற முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின்
|3 Nov 2022 5:59 PM IST
இல.கணேசனின் சகோதரர் இல.கோபாலனின் 80-வது பிறந்தநாள் விழா சென்னையில் இன்று நடைபெற்றது.
சென்னை,
மணிப்பூர் மாநில ஆளுநரும், மேற்கு வங்காள மாநிலத்தின் பொறுப்பு ஆளுநருமான இல.கணேசனின் சகோதரர் இல.கோபாலனின் 80-வது பிறந்தநாள் விழா சென்னையில் இன்று நடைபெற்றது.
விழாவில், தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்காள மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி ஆகியோர் கலந்துகொண்டனர். பிறந்தநாள் காணும் இல.கோபாலனுக்கு முதல்வர் ஸ்டாலின் மரக்கன்று பசுமைக்கூடை வழங்கி வாழ்த்தினார்.
இதேபோல், நடிகர் ரஜினிகாந்த், புதுச்சேரி மற்றும் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் பாஜக முக்கிய நிர்வாகிகள், ஜி.கே.வாசன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும் இந்த விழாவில் கலந்துகொண்டனர்.