விருதுநகர்
விருதுநகர் மாவட்டத்தில் நாளை முதல் ஜமாபந்தி நிகழ்ச்சி
|விருதுநகர் மாவட்டத்தில் நாளை முதல் ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெறும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டத்தில் நாளை முதல் ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெறும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
ஜமாபந்தி
விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாத ரெட்டி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:-
வத்திராயிருப்பு தாலுகா அலுவலகத்தில் நாளை(புதன்கிழமை) முதல் 27-ம் தேதி வரை கலெக்டர் தலைமையிலும், வெம்பக்கோட்டை தாலுகாவில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் மே 25-ந் தேதி முதல் 27--ந் தேதி வரையிலும் மற்றும் ஜூன் 1 முதல் 2 வரையிலும் 5 நாட்கள் ஜமாபந்தி நடைபெறும். ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா அலுவலகத்தில் சிவகாசி சப்-கலெக்டரால் மே 25-ந் தேதி முதல் 27-ந் தேதி வரையில் 3 நாட்கள் ஜமாபந்தி நடத்தப்படும். சாத்தூர் தாலுகா அலுவலகத்தில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் மூலம் மே 25-ந் தேதி முதல் 27-ந் தேதி வரையிலும் மற்றும் ஜூன் 1-ந் தேதி மற்றும் ஜூன் 2-ந் தேதி ஆகிய 5 நாட்கள் ஜமாபந்தி நடைபெறும்.
விருதுநகர் தாலுகா அலுவலகத்தில் மாவட்ட கலெக்டரின் கூடுதல் நேர்முக உதவியாளர்(நிலம்) மே 25-ந் தேதி முதல் 27-ந் தேதி வரையிலும் ஜூன் 1-ந் தேதி முதல் ஜூன் 3-ந் தேதி வரையிலும் 6 நாட்கள் ஜமாபந்தி நடத்துவார். காரியாபட்டி தாலுகா அலுவலகத்தில் தனித்துணை ஆட்சியர்(கலால்) நாளை முதல் 27-ந் தேதி வரையிலும் ஜூன் 1-ந் தேதி முதல் 3-ந் தேதி வரையிலும் ஜமாபந்தி நடத்துவார்.
திருச்சுழி
திருச்சுழி தாலுகா அலுவலகத்தில் முத்திரைத்தாள் தனித்துணை ஆட்சியர், நாளை முதல் 27-ந் தேதி வரையிலும் ஜூன் 1-ந் தேதி முதல் ஜூன் 3-ந் தேதி வரையிலும் மற்றும் ஜூன் 7-ந் தேதி மற்றும் ஜூன் 8-ந் தேதி ஆக மொத்தம் 8 நாட்கள் ஜமாபந்தி நடத்துவார். அருப்புக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் அருப்புக்கோட்டை ஆர்.டி.ஓ. நாளை முதல் 27-ந் தேதி வரையிலும் ஜூன் 1-ந் தேதி முதல் 3-ந் தேதி வரையிலும் மற்றும் ஜூன் 7-ந் தேதியும் ஆக மொத்தம் 7 நாட்கள் நடத்துவார். ராஜபாளையம் தாலுகா அலுவலகத்தில் நாளை தேதி முதல் 27-ந்தேதி வரையிலும் மற்றும் ஜூன் 1-ந்தேதி மற்றும் 2-ந் தேதி களிலும் மொத்தம் 5 நாட்கள் ஜமாபந்தி நடத்துவார்.
ஜமாபந்தி தொடர்புடைய கிராம நில உடமையாளர்கள் நிலப்பதிவு சம்பந்தப்பட்ட மனுக்கள், பட்டா மாறுதல், நில ஒப்படைப்பு, நில நிர்வாகம் மற்றும் வருவாய்த்துறை தொடர்புடைய பல்வேறு கோரிக்கை தொடர்பாக மனு செய்து பயன்பெறலாம். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.
சிவகாசி
மேலும் சிவகாசி தாலுகாவில் ஜமாபந்தி நிகழ்ச்சி நாளை தொடங்கி ஜூன் மாதம் 2-ந் தேதி வரை நடைபெற உள்ளதாக தாசில்தார் லோகநாதன் தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-
சிவகாசி தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி நாளை(புதன்கிழமை) நடக்கிறது. இதில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் ஞானவேலு கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனு பெறுகிறார். முதல் நாள் ஜமாபந்தி நிகழ்ச்சியில் வேண்டுராயபுரம், எம்.துரைச்சாமிபுரம், மாரனேரி, ஆனையூர், கொங்கலாபுரம், சிவகாசி, விஸ்வநத்தம், நாரணாபுரம், வி.சொக்கலிங்காபுரம் ஆகிய கிராமங்களை சேர்ந்தவர்கள் தங்கள் மனுக்களை தாலுகா அலுவலகத்தில் கொடுத்து தீர்வு பெறலாம். இவ்வாறு அவர் கூறினார்.