< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
2024 ஆம் ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது
|6 Jan 2024 7:43 AM IST
2024ஆம் ஆண்டிற்கான முதல் ஜல்லிக்கட்டு போட்டிகள் இன்று தச்சங்குறிச்சியில் தொடங்கியது
புதுக்கோட்டை,
2024ஆம் ஆண்டிற்கான முதல் ஜல்லிக்கட்டு போட்டிகள் இன்று புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் நடைபெறுகிறது. இதில் சுமார் 700 காளைகள் பங்கேற்க உள்ளன.
ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி தச்சங்குறிச்சியில் அந்தோணியார் தேவாலய புத்தாண்டு விழாவை முன்னிட்டு நடைபெறுவது வழக்கம். அதன்படி 2024ஆம் ஆண்டிற்கான ஜல்லிக்கட்டு போட்டிகள் இன்று தொடங்கியது . இதில் சுமார் 700 காளைகள் பங்கேற்றுள்ளன.
போட்டியில் பங்கேற்கும் காளைகளுக்கு ஆன்லைன் பதிவு நடத்தப்பட்டது. காரைக்குடி, திருப்பத்தூர், திண்டுக்கல், தஞ்சாவூர், தேவகோட்டை, நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து காளைகள் இதில் கலந்து கொள்கின்றன.