< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி 22-ந்தேதி வெளியீடு
|27 Dec 2023 12:52 AM IST
தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடும் தேதி தள்ளி வைக்கப்படுவதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது
சென்னை,
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்தப் பணிகள் நடைபெற்று வந்தன. டிசம்பர் 9-ந்தேதி இந்த பணிகள் நிறைவடையும் என்றும், அதன்பிறகு ஜனவரி 5-ந்தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும் இந்திய தேர்தல் கமிஷன் ஏற்கனவே அறிவித்திருந்தது.
தற்போது அந்த தேதிகள் மாற்றம் செய்யப்பட்டு காலம் நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது. இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி 5-ந்தேதியில் இருந்து ஜனவரி 22-ந்தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டு உள்ளது.
இதற்கான அறிவிப்பை இந்திய தேர்தல் கமிஷன் வெளியிட்டது. தமிழகம் உள்ளிட்ட 12 மாநிலங்களிலும் இந்த கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.