< Back
மாநில செய்திகள்
தூக்கில் பிணமாக தொங்கிய பெண் ஊழியர்
மயிலாடுதுறை
மாநில செய்திகள்

தூக்கில் பிணமாக தொங்கிய பெண் ஊழியர்

தினத்தந்தி
|
7 Dec 2022 12:55 AM IST

மயிலாடுதுறையில், யானைக்கால் நோய் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் பெண் ஊழியர் தூக்கில் பிணமாக தொங்கினார். சந்தேக மரணம் என போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மயிலாடுதுறையில், யானைக்கால் நோய் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் பெண் ஊழியர் தூக்கில் பிணமாக தொங்கினார். சந்தேக மரணம் என போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உதவி களப்பணியாளர்

கன்னியாகுமரி மாவட்டம் அழகியபாண்டியபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்த்(வயது 42). இவர், அதே பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். இவருடைய மனைவி அனிதா(36). இவர் மருத்துவத்துறையில் பணியாற்றி வந்தார்.

பணியிட மாறுதல் காரணமாக கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மயிலாடுதுறை யானைக்கால் நோய் தடுப்பு பிரிவில் உதவி களப்பணியாளராக பணியாற்றி வந்தார்.

தூக்கில் பிணமாக தொங்கினார்

கடந்த 3-ந் தேதி பணியை முடித்த அனிதா அலுவலகத்திலேயே தங்கியுள்ளார். மறுநாள் காலை அலுவலகத்துக்கு ஊழியர்கள் வந்த போது கதவு உள்புறமாக தாழ்ப்பாள் போடப்பட்டு இருந்துள்ளது.

இதனால் அவர்கள் சத்தம் போட்டு பார்த்தும் யாரும் திறக்காததால் பூட்டை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். அப்போது அலுவலகத்தில் உள்ள மின்விசிறியில் அனிதா தூக்கில் பிணமாக தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

சந்தேக மரணம் என வழக்குப்பதிவு

இதுகுறித்து மயிலாடுதுறை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அனிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து அனிதாவின் கணவர் ஆனந்த், மயிலாடுதுறை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

அந்த புகாரில் தனது மனைவி பணிச்சுமை காரணமாக மன அழுத்தத்தில் இருந்ததாகவும், இது தொடர்பாக தன்னிடம் செல்போனில் பேசும்போது கூறியதாகவும் தெரிவித்திருந்தார். இதையடுத்து சந்தேக மரணம் என போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பரபரப்பு

மயிலாடுதுறையில், யானைக்கால் நோய் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் பெண் ஊழியர் தூக்கில் பிணமாக தொங்கியதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Tags :
மேலும் செய்திகள்