தஞ்சாவூர்
பழுதடைந்த உயர்கோபுர மின்விளக்கை சீரமைக்க வேண்டும்
|பழுதடைந்த உயர்கோபுர மின்விளக்கை சீரமைக்க வேண்டும்
சேதுபாவாசத்திரம்:
சேதுபாவாசத்திரம் கடைவீதியில் உள்ள பழுதடைந்த உயர்கோபுர மின்விளக்கை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உயர்கோபுர மின்விளக்கு
சேதுபாவாசத்திரம் கடைவீதியில், கிழக்கு கடற்கரை முக்கிய சாலையில் பஸ் நிலையம் அருகே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் உயர் கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டது. கஜா புயலின் போது இந்த உயர் கோபுர மின்விளக்கு சேதமடைந்தது. கிழக்கு கடற்கரை முக்கிய சாலையில் அமைக்கப்பட்டுள்ள இந்த விளக்கு ஒளிராததால், இந்த பகுதியே இருளில் மூழ்கியது. இதன் காரணமாக இரவு நேரங்களில் பெண்கள் பஸ் நிலையத்தில் காத்திருக்க அச்சப்படும் நிலை உள்ளது. இதனை பயன்படுத்தி திருட்டு உள்ளிட்ட அசம்பாவித சம்பவங்கள் நடைபெற வாய்ப்பு உள்ளது.
சீரமைக்க வேண்டும்
இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பழுதடைந்த உயர்கோபுர மின்விளக்கை சீரமைத்து, அனைத்து விளக்குகளும் ஒளிரும் வகையில் புதிதாக அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.