ராணிப்பேட்டை
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 24-ந் தேதி நடக்கிறது
|ராணிப்பேட்டையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 24-ந் தேதி நடக்கிறது
ராணிப்பேட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 24-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணி அளவில் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்குகிறார். கூட்டத்தில் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல், வேளாண் வணிகம் மற்றும் விற்பனை, பட்டு வளர்ச்சி, மீன்வளம், கால்நடை பராமரிப்பு, கூட்டுறவு சர்க்கரை ஆலைகள், கூட்டுறவு, நீர்வள ஆதார அமைப்பு, வனம், மாசு கட்டுப்பாட்டு வாரியம், மின்சாரம், போக்குவரத்து, பால்வளம் உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டு விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் தெரிவிக்கும் குறைகளுக்கு பதிலளிக்க உள்ளனர்.
எனவே ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் கள பிரச்சனைகளை களைத்திட கூட்டத்தில் கலந்துகொண்டு பொதுப் பிரச்சினைகளை கோரிக்கை வாயிலாகவும், தனிநபர் பிரச்சினைகளை மக்கள் வாயிலாகவும் தெரிவிக்கலாம். விவசாயிகள் தங்கள் விவரங்களை காலை 10 மணிக்கு பதிவு செய்திட வேண்டும்.
மேலும் ஜூலை மாதத்தின் முதலாவது வெள்ளிக்கிழமையன்று வட்ட அளவிலும், இரண்டாம் வெள்ளிக்கிழமையன்று கோட்ட அளவிலும், மூன்றாம் வெள்ளிக்கிழமையன்று மாவட்ட அளவிலும் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டங்கள் நடைபெறும் என கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.