< Back
மாநில செய்திகள்
விழுப்புரம்
மாநில செய்திகள்
கிணற்றில் தவறி விழுந்த விவசாயி சாவு
|9 July 2023 12:15 AM IST
விழுப்புரம் அருகே கிணற்றில் தவறி விழுந்த விவசாயி பரிதாபமாக இறந்தார்.
விழுப்புரம் அருகே உள்ள சத்திப்பட்டு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கண்ணன் (வயது 63), விவசாயி. இவர் அதே கிராமத்தை சேர்ந்த சண்முகம் என்பவருடைய நிலத்தை கடந்த 5 வருடமாக குத்தகைக்கு எடுத்து பயிர் செய்து வந்தார். சம்பவத்தன்று இவர், நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்ச சென்றார். அப்போது அங்குள்ள கிணற்றில் அவர் தவறி விழுந்து நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.இதுகுறித்த புகாரின்பேரில் காணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.