< Back
மாநில செய்திகள்
விவசாய நிலத்தில் உழுது கொண்டிருந்தபோது டிராக்டர் சக்கரத்தில் சிக்கி விவசாயி பலி
திருவள்ளூர்
மாநில செய்திகள்

விவசாய நிலத்தில் உழுது கொண்டிருந்தபோது டிராக்டர் சக்கரத்தில் சிக்கி விவசாயி பலி

தினத்தந்தி
|
31 Jan 2023 8:54 PM IST

விவசாய நிலத்தில் உழுது கொண்டிருந்த போது டிராக்டர் சக்கரத்தில் சிக்கி விவசாயி பலியானார்.

விவசாயி

திருவள்ளூர் அடுத்த ஜமீன் கொரட்டூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் ரவிசங்கர் (வயது 62) விவசாயி. இவர் நேற்று முன்தினம் காலை தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் டிராக்டரில் ஏர் உழுதுக் கொண்டிருந்தார். அப்பொழுது இவர் உழுது கொண்டிருந்த டிராக்டர் சேற்றில் சிக்கிக் கொண்டது. இதையடுத்து வேறு ஒரு டிராக்டரை கொண்டு வந்து சேற்றில் சிக்கிய டிராக்டரை இழுத்த போது சேற்றில் தவறி விழுந்து டிராக்டரின் சக்கரத்தில் ரவிசங்கர் மாட்டிக் கொண்டார்.

பலி

இதையடுத்து மூச்சுத் திணறல் ஏற்பட்டு சுய நினைவின்றிருந்த ரவிசங்கரை அங்கிருந்தவர்கள் மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் அவரை பரிசோதனை செய்து பார்த்து ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இது தொடர்பாக வெள்ளவேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்