< Back
மாநில செய்திகள்
அரியலூர்
மாநில செய்திகள்
சோளத்தட்டைகளை தீ வைத்து எரித்த விவசாயி உடல் கருகி சாவு
|15 April 2023 11:39 PM IST
சோளத்தட்டைகளை தீ வைத்து எரித்த விவசாயி உடல் கருகி உயிரிழந்தார்.
வி.கைகாட்டி:
விவசாயி
அரியலூர் மாவட்டம், வி.கைகாட்டி அருகே உள்ள கல்லங்குறிச்சி வடக்கு சீனிவாசபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி(வயது 73). விவசாயி. நேற்று இவரது விவசாய நிலத்தில் சோளம் அறுவடை செய்யப்பட்டுள்ளது.
பின்னர் காலியாக இருந்த நிலத்தில் சோளத்தட்டைகளை தீ வைத்து எரித்து கொண்டிருந்தபோது, திடீரென காற்று வேகமாக வீசியதால் நான்கு புறமும் தீப்பற்றி கொண்டது.
சாவு
இதில் பழனிச்சாமி வெளியில் வர முடியாமல், தீயில் சிக்கி உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து கயர்லாபாத் போலீசில் பழனிச்சாமியின் மகன் கருப்புசாமி கொடுத்த புகாரின்பேரில் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சேகர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.