நாளை நடைபெறவிருந்த மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் திடீர் ஒத்திவைப்பு
|கமல்ஹாசன் தலைமையில் மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நாளை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
சென்னை,
நாடாளுமன்ற தேர்தலில் 'இந்தியா' கூட்டணியில் கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் இடம் பெற வாய்ப்புள்ளது என்றும், தமிழ்நாட்டில் அந்த கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த நிலையில் சென்னை தியாகராயநகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் கமல்ஹாசன் தலைமையில் மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நாளை (வியாழக்கிழமை) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த கூட்டத்தின் முடிவில், நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யத்தின் நிலைப்பாடு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் திடீரென்று இந்த கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தேர்தல் பணி ஒருங்கிணைப்புக்குழு துணைத் தலைவர்கள் மவுரியா, தங்கவேலு, பொதுச்செயலாளர் அருணாச்சலம் ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் ' 7-ந்தேதி கமல்ஹாசன் தலைமையில் மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நாளை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.(நாளை) சென்னையில் நடைபெற இருந்த மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் ஒத்தி வைக்கப்படுகிறது. இந்த கூட்டம் நடைபெறும் நாள், நேரம், இடம் பின்னர் தெரிவிக்கப்படும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.