< Back
மாநில செய்திகள்
பா.ஜனதா சார்பில் கூடுவோம் கூட்டுவோம் நிகழ்ச்சி
விருதுநகர்
மாநில செய்திகள்

பா.ஜனதா சார்பில் கூடுவோம் கூட்டுவோம் நிகழ்ச்சி

தினத்தந்தி
|
16 Oct 2023 1:07 AM IST

பா.ஜனதா சார்பில் கூடுவோம் கூட்டுவோம் நிகழ்ச்சி நடைபெற்றது.

விருதுநகர் கிழக்கு மாவட்ட பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்புகள் சார்பில் விருதுநகர், அருப்புக்கோட்டை நகர சபை வார்டு பகுதிகளிலும் மற்றும் யூனியன் பகுதிகளிலும் காரியாபட்டி, திருச்சுழி, நரிக்குடி யூனியன் கிராம பகுதிகளிலும் கூடுவோம் கூட்டுவோம் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இந்தநிகழ்ச்சியின் போது மக்களிடையே நடைபெற இருக்கின்ற நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மத்திய அரசின் திட்டங்களை பற்றி விரிவாக பேசப்பட்டது.

விருதுநகர் யூனியன் இனாம் ரெட்டியபட்டி கிராமத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கிழக்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் பாண்டுரங்கன் கலந்து கொண்டு கிராம மக்களிடையே பேசினார்.

மேலும் செய்திகள்