< Back
மாநில செய்திகள்
எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் தாமதமாக வந்தது
திருவாரூர்
மாநில செய்திகள்

எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் தாமதமாக வந்தது

தினத்தந்தி
|
27 May 2022 3:33 PM GMT

நீடாமங்கலம் ரெயில் நிலையத்துக்கு எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் தாமதமாக வந்ததால் பயணிகள் அவதி அடைந்தனர்.

நீடாமங்கலம்:

எர்ணாகுளத்தில் இருந்து காரைக்கால் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் நீடாமங்கலம் ரெயில் நிலையத்திற்கு தினமும் காலை 9.45 மணிக்கு வருவது வழக்கம். ஆனால் நேற்று காலை 10.5 மணிக்கு 20 நிமிடம் தாமதமாக எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரெயில் நீடாமங்கலம் ரெயில் நிலையத்துக்கு வந்தது. இதனால் அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்கள், ரெயில் பயணிகள் குறித்த நேரத்தில் தங்களது பணிகளுக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டனர்.


மேலும் செய்திகள்