< Back
மாநில செய்திகள்
நர்சை பாலியல் பலாத்காரம் செய்த என்ஜினீயர்
கடலூர்
மாநில செய்திகள்

நர்சை பாலியல் பலாத்காரம் செய்த என்ஜினீயர்

தினத்தந்தி
|
3 Nov 2022 12:16 AM IST

கடலூர் நர்சை பாலியல் பலாத்காரம் செய்த என்ஜினீயர் மீதும், அதற்கு உடந்தையாக இருந்த 3 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கடலூர் புதுப்பாளையம் முத்துக்குமரன் தெருவை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி மகன் ஜெயராமன் (வயது 22). என்ஜினீயர். இவரும் 23 வயது நர்சும் கடந்த சில ஆண்டுகளாக நட்புடன் பழகி வந்தனர். அப்போது ஜெயராமன், நர்சிடம் காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறியுள்ளார்.

இதையடுத்து நர்சை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி, கடந்த 1½ மாதத்துக்கு முன்பு பரங்கிப்பேட்டை புதுப்பேட்டை பகுதிக்கு அழைத்துச்சென்றார். அங்கு வைத்து, நர்சை திருமணம் செய்த அவர், அங்கு அவரை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது.

4 பேர் மீது வழக்கு

சம்பவத்தன்று அவரை கடலூருக்கு அழைத்து வந்த ஜெயராமன், நர்சை பிடிக்கவில்லை என்று கூறி விட்டு ஏமாற்றி சென்று விட்டார். இதனால் செய்வதறியாது தவித்த நர்சு இது பற்றி கடலூர் மகளிர் போலீசில் புகார் செய்தார். அதில், ஜெயராமன் தன்னை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாகவும், அதற்கு உடந்தையாக அவரது தந்தை சுந்தரமூர்த்தி, தாய் ராஜேஸ்வரி, மகள் ஜெயஸ்ரீ ஆகியோர் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார். அதன்பேரில் அவர்கள் 4 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்