< Back
மாநில செய்திகள்
தர்மபுரி
மாநில செய்திகள்
மின்மீட்டரை தூக்கி வீசிய ஊழியர் பணி இடைநீக்கம்
|11 Aug 2022 10:13 PM IST
புகார் கொடுக்க வந்தவர்கள் மீது மின்மீட்டரை தூக்கி வீசிய ஊழியர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
பாலக்கோடு:-
பாலக்கோடு பேரூராட்சி தீர்த்தகிரி நகரை சேர்ந்தவர்கள், பாலக்கோடு மின்வாரிய அலுவலகத்துக்கு சென்று நீண்ட நேரமாக எங்கள் பகுதியில் மின்தடை ஏற்பட்டுள்ளது என்று கூறினர். அங்கு மின்வாரிய பொறியாளர் இல்லாததால், வணிக ஆய்வாளர் குப்புராஜிடம் பொதுமக்கள் புகார் கூறினர். அப்போது சிலர், குப்புராஜை அவதூறாக பேசியதாக தெரிகிறது. இதில் ஆத்திரம் அடைந்த குப்புராஜ், அங்கு இருந்த மின்மீட்டரை தூக்கி வீசியதாக கூறப்படுகிறது. இதனை சிலர் செல்போன் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இது வேகமாக பரவியது.
இதற்கிடையே வெள்ளிச்சந்தை துணை மின் நிலைய செயற்பொறியாளர் வனிதா, வணிக ஆய்வாளர் குப்புராஜை பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.