< Back
மாநில செய்திகள்
தேசிய ஊரக வேலை திட்டப்பணி வழங்கக்கோரி எல்லாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முற்றுகை
திருவள்ளூர்
மாநில செய்திகள்

தேசிய ஊரக வேலை திட்டப்பணி வழங்கக்கோரி எல்லாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முற்றுகை

தினத்தந்தி
|
14 Sep 2022 9:17 AM GMT

தேசிய ஊரக வேலை திட்டப்பணி வழங்கக்கோரி எல்லாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முற்றுகையிடப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் சூளைமேனி ஊராட்சி மன்ற தலைவராக பதவி வகித்து வருபவர் சாந்தி காளிதாஸ். இந்த ஊராட்சியில் காலனி பகுதியில் 120-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.இந்த பகுதியில் வசித்து வரும் ஒரு சிலருக்கு கடந்த ஒரு மாத காலமாக தேசிய ஊரக வேலை திட்டத்தில் வேலை வழங்குவதில்லை என்று கூறப்படுகிறது.

இது குறித்து ஊராட்சி மன்ற தலைவரிடம் முறையிட்ட போது உரிய பதில் கூறுவதில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், நேற்று இந்த பகுதியை சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஸ்டாலினை சந்தித்து இது குறித்து முறையிட்டனர்.

அவரும் உரிய பதில் அளிக்கவில்லை என தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் உடனடியாக தேசிய ஊரக வேலை திட்ட பணி வழங்கக்கோரி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இன்று (புதன்கிழமை) மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று அவர்கள் கூறிவிட்டு கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்