< Back
மாநில செய்திகள்
சாலையில் உள்ள மின்கம்பத்தை அகற்ற வேண்டும்
அரியலூர்
மாநில செய்திகள்

சாலையில் உள்ள மின்கம்பத்தை அகற்ற வேண்டும்

தினத்தந்தி
|
16 March 2023 12:30 AM IST

சாலையில் உள்ள மின்கம்பத்தை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரியலூர் அருகில் உள்ள எருத்துக்காரன்பட்டி ஊராட்சியில் சாலைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் பாலம் அமைக்கப்பட்டு சிமெண்டு சாலை போடப்பட்டுள்ளது. பாலத்தையொட்டியுள்ள சாலையின் நடுவில் ஒரு மின்கம்பம் உள்ளது. இதனால் அந்த தெருவில் வசிப்பவர்கள் தங்களது இருசக்கர வாகனங்களில் மட்டுமே அந்த சாலையில் செல்ல முடியும். கார், லாரி போன்ற வாகனங்கள் செல்ல முடியாத அளவில், அந்த மின்கம்பம் இடையூறாக அமைந்துள்ளது. சாலை பணிகள் தொடங்குவதற்கு முன்பே ஊராட்சி சார்பில் மின்வாரியத்திற்கு தகவல் தெரிவித்து, அந்த மின் கம்பத்தை அப்புறப்படுத்தியிருந்தால், போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படும் நிலை இருந்திருக்காது என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். மேலும் தற்போதாவது நடவடிக்கை எடுத்து, அந்த மின்கம்பத்தை அகற்றி, இடையூறு இல்லாத வகையில் சாலையோரம் அமைக்க வேண்டும், என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்