< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
தூத்துக்குடி: குடிபோதையில் படுத்துக் கொண்டு பீடி குடித்தவர் தீயில் கருகி பலி
|30 May 2022 7:11 PM IST
தூத்துக்குடியில் குடிபோதையில் படுத்துக் கொண்டு பீடி குடித்தவர் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி எஸ்.எஸ்.மாணிக்கபுரத்தை சேர்ந்தவர் ஜான். இவருடைய மகன் கால்சன் ஜான் (வயது 51) பெயிண்டராக உள்ளார். இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததுள்ளது.
இந்நிலையில் இவர் குடிபோதையில் வீட்டின் முற்றத்தில் டிஜிட்டல் பேனரை விரித்து அதன் மீது படுத்து இருந்தாராம். அப்போது பீடி குடித்து விட்டு அணைக்காமல் போட்டுவிட்டதாக கூறப்படுகிறது.
அப்போது டிஜிட்டல் பேனரில் விழுந்த பீடியில் இருந்து தீப்பற்றி எரிந்து உள்ளது. குடிபோதையில் இருந்த கால்சன் ஜானால் எழும்ப முடியாத நிலையில், அவரது உடலிலும் தீப்பற்றியது. இதில் பலத்த காயம் அடைந்த கால்சன் ஜான் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் தூத்துக்குடி வடபாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.