< Back
மாநில செய்திகள்
திருச்சி
மாநில செய்திகள்
பஸ்சுக்கு வழிவிட மறுத்த போதை ஆசாமி
|1 Sept 2022 1:11 AM IST
பஸ்சுக்கு வழிவிட மறுத்த போதை ஆசாமியால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து ஸ்ரீரங்கத்திற்கு நேற்று அதிகாலை 5 மணிக்கு தனியார் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. பஸ் ஜங்ஷனில் வந்தபோது, பஸ்சுக்கு முன்பாக போதை ஆசாமி ஒருவர் படுத்துக் கொண்டு வழிவிட மறுத்தார். அவருடன் பஸ் கண்டக்டர் பேச்சுவார்த்தை நடத்தியும் பலனளிக்காமல் போகவே வேறு வழியில்லாமல் அவரை குண்டுக்கட்டாக தூக்கி அப்புறப்படுத்தினார். பின்னர் அங்கிருந்து பஸ் புறப்பட்டு சென்றது. அதிகாலையில் போதை ஆசாமியின் அலப்பறையால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.