< Back
மாநில செய்திகள்
வியாபாரியிடம் திருடிய டிரைவர் கைது
விருதுநகர்
மாநில செய்திகள்

வியாபாரியிடம் திருடிய டிரைவர் கைது

தினத்தந்தி
|
17 Oct 2023 1:24 AM IST

வியாபாரியிடம் திருடிய டிரைவர் கைது செய்யப்பட்டார்.

கோவை ராமகிருஷ்ணாபுரம் ரோட்டை சேர்ந்தவர் வெள்ளி வியாபாரி முத்துகிருஷ்ணன் (வயது61). இவர் சிவகாசி வடக்கு ரத வீதியில் உள்ள ஒரு நகை கடைக்கு வெள்ளி பொருட்களை வினியோகம் செய்வதற்காக தனது காரில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வந்துள்ளார். காரை கோவையை சேர்ந்த டிரைவர் சாமுவேல்கணேஷ் (40) என்பவர் ஓட்டி வந்துள்ளார். சிவகாசி வடக்கு ரதவீதியில் காரை நிறுத்தி விட்டு முத்துகிருஷ்ணன் அருகில் உள்ள நகை கடைக்கு சென்றார். அப்போது காரின் பின் சீட்டில் வைத்திருந்த 8 கிலோ வெள்ளி பொருட்களும், ரூ.25 ஆயிரமும் திருட்டு போனது. இதுகுறித்து சிவகாசி டவுன் போலீசில் வியாபாரி முத்துகிருஷ்ணன் புகார் அளித்தார். அதன் பேரில் சிவகாசி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீஸ் விசாரணையில் வெள்ளி பொருட்கள் மற்றும் பணத்தை கார் டிரைவர் சாமுவேல்கணேஷ் திருடியது தெரிய வந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 8 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் பணத்தை மீட்டனர்.

மேலும் செய்திகள்