< Back
மாநில செய்திகள்
பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த டிரைவர் சாவு
அரியலூர்
மாநில செய்திகள்

பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த டிரைவர் சாவு

தினத்தந்தி
|
24 Oct 2023 11:35 PM IST

பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த டிரைவர் உயிரிழந்தார்.

விக்கிரமங்கலம்:

அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே உள்ள நாயக்கர்பாளையம் வடக்கு தெருவை சேர்ந்தவர் சுந்தர பாண்டியன்(வயது 37). இவர் கோவையில் சொந்தமாக கார் வைத்து, வாடகைக்கு ஓட்டி வந்தார். இவரது மனைவி நாககனிக்கு 2-வதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது. இவர்களை பார்ப்பதற்காக வந்த சுந்தரபாண்டியன் கடந்த ஒருவாரமாக தினமும் நாயக்கர்பாளையத்தில் உள்ள தனது வீட்டிற்கு குடித்துவிட்டு வந்ததாக தெரிகிறது. சம்பவத்தன்று அளவுக்கு அதிகமாக குடித்துவிட்டு வந்த சுந்தரபாண்டியன், தனது கையில் வைத்திருந்த பெட்ரோல் கேனுடன் வீட்டிற்குள் சென்று தலையில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக்கொண்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த உறவினர்கள், சுந்தரபாண்டியனின் உடலில் எரிந்த தீயை அணைத்து, அவரை சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சுந்தரபாண்டியன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து விக்கிரமங்கலம் போலீசில் சுந்தரபாண்டியனின் தாய் சிவக்கொழுந்து அளித்த புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மாறன் வழக்குப்பதிவு செய்து சுந்தரபாண்டியன் தீக்குளித்ததற்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்