< Back
மாநில செய்திகள்
அரியலூர்
மாநில செய்திகள்
சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்த டிரைவர் போக்கோவில் கைது
|12 Nov 2022 1:26 AM IST
சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்த டிரைவர் போக்கோவில் கைது செய்யப்பட்டார்.
ஆண்டிமடம்:
கடலூர் மாவட்டம், கிளிமங்கலம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த அஞ்சப்பனின் மகன் பிரகாஷ்(வயது 22). பால் வேன் டிரைவரான இவர் அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் பகுதிக்கு பால் வினியோகம் செய்ய அடிக்கடி வந்து சென்றுள்ளார். அப்போது 17 வயது சிறுமியுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, அந்த சிறுமியை பிரகாஷ் சென்னைக்கு கடத்திச்சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த சிறுமியின் பெற்றோர், ஆண்டிமடம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் வழக்குப்பதிவு செய்து, பிரகாசை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.