< Back
மாநில செய்திகள்
கன்னியாகுமரி
மாநில செய்திகள்
உத்தரவை மீறி லாரியை ஓட்டிய டிரைவர் சிக்கினார்
|8 July 2023 3:09 AM IST
போலீஸ் உத்தரவை மீறி லாரியை ஓட்டிய டிரைவர் சிக்கினார்
நாகர்கோவில்,
நாகர்கோவில் அப்டா மார்க்கெட் பகுதியில் போக்குவரத்து ஒழுங்குப்பிரிவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு டாரஸ் லாரி போலீசார் சைகை காண்பித்தும் நிற்காமல் சென்றது. இதையடுத்து போலீசார் அந்த லாரியை பின்தொடர்ந்து துரத்திச் சென்றனர். ஒழுகினசேரி பகுதியில் வழிமறித்து நிறுத்தினர்.
பின்னர் அந்த லாரி டிரைவருக்கு போலீசார் உத்தரவை மீறி இயக்கியதற்காக ரூ.2 ஆயிரமும், பகல் நேரத்தில் நகருக்குள் கனரக வாகனங்களை இயக்கக்கூடாது என்ற உத்தரவை மீறி இயக்கியதற்காக ரூ.500-ம், சீருடை அணியாமல் வாகனம் ஓட்டியதற்காக ரூ.500-ம் என மொத்தம் ரூ.3 ஆயிரம் அபராதம் விதித்து போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.