< Back
மாநில செய்திகள்
திருக்கழுக்குன்றம் அருகே கார்-லாரி மோதிய விபத்தில் டிரைவர் பலி
செங்கல்பட்டு
மாநில செய்திகள்

திருக்கழுக்குன்றம் அருகே கார்-லாரி மோதிய விபத்தில் டிரைவர் பலி

தினத்தந்தி
|
11 Jun 2022 7:16 PM IST

திருக்கழுக்குன்றம் அருகே கார்-லாரி மோதிய விபத்தில் டிரைவர் பலியானார்.

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அடுத்த தேசுமுகிப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 60).டிரைவர் சென்னையில் இருந்து நேற்று முன்தினம் இரவு 1 மணி அளவில் திருக்கழுக்குன்றம் நோக்கி காரில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.

திருக்கழுக்குன்றம் கீரப்பாக்கம் என்ற இடத்தில் எதிர்பாராத விதமாக அவருடைய கார் மீது லாரி மோதியது.

இதில் ஆறுமுகம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து திருக்கழுக்குன்றம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆறுமுகத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்