< Back
மாநில செய்திகள்
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்
மனைவியை அடித்து கொன்ற கார் டிரைவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
|20 May 2022 11:35 PM IST
திருக்கோவிலூர் அருகே மனைவியை அடித்து கொன்ற கார் டிரைவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
திருக்கோவிலூர்
திருக்கோவிலூர் அருகே உள்ள குச்சிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் நேரு மகன் விஜயராஜ்(வயது 31). கார் டிரைவரான இவர் தனது 14 வயது மனைவி இருசாயி என்கிற மேனகாவை அடித்து கொலை செய்த வழக்கில் விஜயராஜை மணலூர்பேட்டை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தற்போது விஜயராஜ் ஜாமீனில் வெளியே வந்துள்ளதால் அப்பகுதியில் மேலும் சட்டம், ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் அபாயம் உள்ளதால் அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டருக்கு போலீஸ் சூப்பிரண்டு செல்வக்குமார் பரிந்துரை செய்தார். இதை ஏற்று கலெக்டர் ஸ்ரீதர் உத்தரவின் பேரில் மணலூர்பேட்டை போலீசார் விஜயராஜை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.