< Back
மாநில செய்திகள்
டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பு சுவரில் ஏறிய கல்லூரி பஸ்
சென்னை
மாநில செய்திகள்

டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பு சுவரில் ஏறிய கல்லூரி பஸ்

தினத்தந்தி
|
1 Nov 2022 2:15 PM IST

கொடு்ங்கையூர் பஸ் நிறுத்தம் அருகே கல்லூரி பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பு சுவரில் ஏறியது.

சென்னையை அடுத்த மேற்கு தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரி பஸ், மாணவர்களை ஏற்றிக்கொண்டு கொளத்தூர் சென்றது. அங்கு மாணவர்களை இறக்கி விட்டு கொடுங்கையூருக்கு வந்தது. பஸ்சை டிரைவர் பிரான்சிஸ் சேவியர் (வயது 64) என்பவர் ஓட்டினார்.

பெரம்பூர் நெடுஞ்சாலையில் கொடு்ங்கையூர் பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது பிரேக் செயலிழந்ததால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், சாலையில் தாறுமாறு ஓடி சாலையின் நடுவில் உள்ள தடுப்பு சுவரில் ஏறி நின்றது. இதில் பஸ்சின் முன்பகுதி சேதம் அடைந்தது.

இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நல்லவேளையாக இதில் யாருக்கும் எந்தவித காயமோ, சேதமோ ஏற்படவில்லை. இதுபற்றி தகவல் அறிந்துவந்த செம்பியம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சுடலைமணி மற்றும் போலீசார் விபத்துக்குள்ளான பஸ்சை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

மேலும் இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்