கரூர்
குடிபோதையில் ஜீப்பை இயக்கியபோது தவறி கீழே விழுந்து டிரைவர் பலி
|தோகைமலை அருகே திருமண நாளில் குடிபோதையில் ஜீப்பை இயக்கியபோது தவறி கீழே விழுந்து டிரைவர் பரிதாபமாக இறந்தார்.
டிரைவர்
கரூர் மாவட்டம், தோகைமலை அருகே மங்காம்பட்டியை சேர்ந்தவா் சரவணன் (வயது 37). டிைரவா். இவரது மனைவி அம்சவள்ளி . இந்ததம்பதிக்கு ேநற்று முன்தினம் திருமணநாள் ஆகும். இதனால் சரவணன் தனது பொலிரோ ஜீப்பில், தனது நண்பர் வேங்கடத்தம்பட்டியை சேர்ந்த மாரிமுத்து என்பவருக்கு திருமணநாள் பார்ட்டி கொடுப்பதற்காக அழைத்து சென்றுள்ளார்.பின்னர் சுக்காம்பட்டியில் உள்ள ஒரு தரிசுக்காட்டில் சரவணனும், மாரிமுத்துவும் அமர்ந்து ஒன்றாக மது அருந்தி உள்ளனர். பின்னர் வீட்டிற்கு செல்வதற்காக குடிபோதையில் சரவணன் தனது ஜீப்பை இயக்கி உள்ளார். அப்போது கதவை சரியாக மூடாததால் சரவணன் நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் ஜீப்பின் சக்கரத்தில் சிக்கிய சரவணனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
பலி
இதுகுறித்து தகவல் அறிந்த சரவணனின் தம்பி ரமேஷ் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தார். அப்போது சரவணன் ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த தோகைமலை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சரவணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த சம்பவம் குறித்து சரவணன் மனைவி அம்சவள்ளி கொடுத்த புகாரின்பேரில் தோகைமலை இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். இறந்த சரவணனுக்கு மகன் மற்றும் மகள் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.