< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
பேருந்து ஆக்சிலேட்டர் உடைந்து பள்ளத்தில் கவிழ்ந்ததில் டிரைவர் பலி
|23 Aug 2022 11:26 PM IST
செஞ்சி அருகே அரசு பேருந்தின் ஆக்சிலேட்டர் உடைந்து பள்ளத்தில் கவிழ்ந்ததில் டிரைவர் உயிரிழந்தார்.
செஞ்சி:
சென்னையிலிருந்து திருவண்ணாமலை நோக்கி ஒரு அரசு பேருந்து இன்று இரவு சென்று கொண்டிருந்தது. அப்போது செஞ்சி கோட்டை வனச்சரகம் அலுவலகம் அருகே பேருந்தின் ஆக்சிலேட்டர் உடைந்து பள்ளத்தில் கவிழ்ந்தது.
இதில் பஸ்சை ஓட்டிச் சென்ற செஞ்சி கட்டபொம்மன் தெருவை சேர்ந்த விநாயகம் (வயது 55) என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார். மேலும் கண்டக்டர் கிருபாகரன் (50) உட்பட நான்கு பேர் படுகாயம் அடைந்தனர்.
பஸ்ஸில் குறைந்த பயணிகளே பயணம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. விபத்து குறித்து தகவல் அறிந்த செஞ்சி போலீசார் விரைந்து சென்று இது குறித்து விசாரணை செய்து வருகிறார்கள்.