< Back
தமிழக செய்திகள்

திருநெல்வேலி
தமிழக செய்திகள்
விபத்தில் டிரைவர் பலி

26 Sept 2023 1:07 AM IST
பழவூர் அருகே விபத்தில் டிரைவர் பலியானார்.
வடக்கன்குளம்:
பழவூர் அருகே உள்ள செட்டிகுளத்தைச் சேர்ந்தவர் அப்துல் ரசாக் மகன் நிஜாஸ் (வயது 31). டிரைவரான இவர் நேற்று இரவு அஞ்சுகிராமத்தில் தன்னுடைய நண்பர்களை பார்த்துவிட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார். கூட்டப்புளி விலக்கு அருகே வரும்போது மோட்டார் சைக்கிள் திடீர் என நிலை தடுமாறி அருகில் இருந்த மரத்தில் மோதியது.
இதில் காயம் அடைந்தவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இதுகுறித்து பழவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.