< Back
மாநில செய்திகள்
மனைவி பிரிந்த ஏக்கத்தில் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை
திருப்பத்தூர்
மாநில செய்திகள்

மனைவி பிரிந்த ஏக்கத்தில் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை

தினத்தந்தி
|
15 Jun 2022 7:27 PM IST

மனைவி பிரிந்த ஏக்கத்தில் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

ஜோலார்பேட்டை

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் பால்ராஜ். இவரது மகன் மனோஜ் குமார் (வயது 28), லாரி டிரைவர். இவர் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருப்பூரில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்த திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த கட்டேரி ஊராட்சி, பூக்காரன் வட்டம் பகுதியை சேர்ந்த அஞ்சலி (26) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் அஞ்சலியின் ஊரிலேயே வசித்து வந்தனர்.

கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அஞ்சலி கணவரை விட்டு தன்னுடைய 4 வயது பெண் குழந்தையுடன் பிரிந்து சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்து வந்த மனோஜ் குமார் அவரது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை போலீசார் சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து ஜோலார்பேட்டை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் காதர் கான் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Tags :
மேலும் செய்திகள்