< Back
மாநில செய்திகள்
பயமுறுத்தும் ப்ளூ காய்ச்சல்! - தமிழக அரசு எடுத்த முக்கிய முடிவு...
மாநில செய்திகள்

பயமுறுத்தும் 'ப்ளூ காய்ச்சல்! - தமிழக அரசு எடுத்த முக்கிய முடிவு...

தினத்தந்தி
|
22 Sept 2022 5:23 PM IST

தமிழகத்தில் 1267 பேருக்கு இன்புளூயன்சா காய்ச்சல் உறுதிசெய்யப்பட்டு உள்ளது.

சென்னை,

தமிழகத்தில் புளூ காய்ச்சல் என்று அழைக்கப்படும் எச்1.என்1. இன்புளூயன்சா காய்ச்சல் அதிகரித்து உள்ளது. தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் இந்த வகை காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக வரக்கூடிய மக்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.

மழை, வெயில் என மாறுபட்ட பருவநிலை காரணமாக இந்த காய்ச்சல் பரவல் ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 5064 பேருக்கு காய்ச்சல் காரணமாக எச்1.என்1 பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 1267 பேருக்கு இன்புளூயன்சா காய்ச்சல் உறுதிசெய்யப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், தமிழகத்தில் அதிகரித்துவரும் காய்ச்சல் சோதனையை அதிகரிக்க அடுத்த 15 நாட்களில் 6 ஆயிரம் சோதனைக்கருவிகளை வாங்க தமிழக சுகாதாரத்துறை முடிவுசெய்துள்ளது.

மேலும் செய்திகள்