< Back
மாநில செய்திகள்
இரட்டை இலை சின்னத்தை முடக்க வாய்ப்புள்ளது - டி.டி.வி. தினகரன்
மாநில செய்திகள்

'இரட்டை இலை சின்னத்தை முடக்க வாய்ப்புள்ளது' - டி.டி.வி. தினகரன்

தினத்தந்தி
|
25 Jan 2023 7:13 PM IST

எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் சுயநலத்தில் பதவிச்சண்டை போட்டுக் கொண்டிருப்பதாக டி.டி.வி. தினகரன் தெரிவித்தார்.

புதுக்கொட்டை,

புதுக்கோட்டை மாவட்டம் கடியாப்பட்டியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னம் தொடர்பான விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த அவர் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் சுயநலத்தில் பதவிச்சண்டை போட்டுக் கொண்டிருப்பதாக குறிப்பிட்டார். இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு கோர்ட்டில் நிலுவையில் உள்ள நிலையில், இதற்கு முன்பு தான் வேட்பாளராக நின்ற போது நடந்ததைப் போல், தற்போது கோர்ட்டு சின்னத்தை முடக்குவதற்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்தார்.


மேலும் செய்திகள்