< Back
மாநில செய்திகள்
சேலம்
மாநில செய்திகள்
வீட்டின் கதவை உடைத்து 10 பவுன் தங்க நகைகள் கொள்ளை
|5 Oct 2023 1:26 AM IST
சூரமங்கலம் அருகே வீட்டின் கதவை உடைத்து 10 பவுன் தங்க நகைகள் கொள்ளை போனது.
சூரமங்கலம்:-
சேலம் சூரமங்கலம் அருகே ஜாகிர் அம்மாபாளையம் பகுதியை சேர்ந்தவர் ஷேக் ஆதம் (வயது 21), இவருடைய சகோதரி வீடு எடப்பாடியில் உள்ளது. இவர் சில நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு எடப்பாடிக்கு சென்று இருந்தார். பின்னர் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், உள்ளே சென்று பார்த்தார். அப்போது வீட்டில் இருந்த 10 பவுன் நகை, ரூ.4 லட்சம் மற்றும் வீட்டு பத்திரத்தை காணவில்லை. இதனை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் சூரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்க நகைகளை திருடியவர்களை தேடி வருகின்றனர்.