< Back
மாநில செய்திகள்
திருச்சி
மாநில செய்திகள்
துறையூரில் வீட்டின் கதவை உடைத்து 10 பவுன் நகைகள் திருட்டு
|27 Oct 2022 1:01 AM IST
துறையூரில் வீட்டின் கதவை உடைத்து 10 பவுன் நகைகள் திருடப்பட்டது.
துறையூரில் உள்ள கணேசபுரம் அண்ணாநகரை சேர்ந்தவர் இளங்கோ. இவர் தீபாவளி பண்டிகையொட்டி கடந்த 23-ந்தேதி வீட்டை பூட்டி விட்டு ஈரோட்டில் உள்ள மாமனார் வீட்டுக்கு குடும்பத்துடன் சென்றார். இந்த நிலையில் அவர் நேற்று முன்தினம் வீடு திரும்பினார். அப்போது, வீட்டின் கதவு உடைந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டுக்குள் சென்றுபார்த்தார்.
வீட்டில் பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த 10 பவுன் நகைகள் திருடப்பட்டு இருந்தது. வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்டு மர்ம ஆசாமிகள்இந்த துணிகர திருட்டில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் துறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டில்ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.