< Back
மாநில செய்திகள்
சிறுமியை கடித்து குதறிய நாய்கள்
திருப்பத்தூர்
மாநில செய்திகள்

சிறுமியை கடித்து குதறிய நாய்கள்

தினத்தந்தி
|
20 Jun 2023 11:32 PM IST

ஆம்பூர் அருகே வீட்டில் விளையாடிய சிறுமியை நாய்கள் கடித்து குதறியது. ஆஸ்பத்திரியில் சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சிறுமியை நாய்கள் கடித்தன

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த காதர்பேட்டை பகுதியை சேர்ந்தவர் அம்ஜத்சாஹெப். இவரது மகள் ஹப்சா (வயது 3). இந்த சிறுமி நேற்று முன்தினம் இரவு சந்தாமியான் தெருவில் உள்ள தனது பாட்டி வீட்டுக்கு சென்று அங்கு விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது, திடீரென 3 நாய்கள் வீட்டுக்குள் நுழைந்து விளையாடிக் கொண்டிருந்த ஹப்சாவை துரத்தி கடித்துக் குதறியது.

இதில் வலி தாங்காமல் சிறுமி கூச்சலிட்டு அழுதார். அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த உறவினர்கள், நாய்களை விரட்டிவிட்டு சிறுமியை மீட்டனர். பின்னர் படுகாயம் அடைந்த சிறுமியை ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பொதுமக்கள் கோரிக்கை

ஆம்பூர் பகுதியில் தெரு நாய்கள் அதிகம் சுற்றித் திரிவதால் பொதுமக்கள் நடந்து செல்ல மிகவும் அச்சப்படுகின்றனர். நடந்து செல்பவர்களை நாய்கள் துரத்துவதால் சிலர் விழுந்து, எழுந்து காயங்களுடன் செல்கின்றனர். எனவே தெருக்களில் சுற்றித் திரியும் நாய்களை பிடிக்க ஆம்பூர் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்