< Back
மாநில செய்திகள்
அடுக்குமாடி குடியிருப்பில் பொதுமக்களை கடித்து குதறிய நாய்
சென்னை
மாநில செய்திகள்

அடுக்குமாடி குடியிருப்பில் பொதுமக்களை கடித்து குதறிய நாய்

தினத்தந்தி
|
23 Aug 2023 7:31 AM IST

போரூரில் அடுக்குமாடி குடியிருப்பில் பொதுமக்களை கடித்து குதறிய நாய்களை பிடித்து சென்ற மாநகராட்சி ஊழியர்களிடம் குடியிருப்பு வாசிகள் வாக்குவாதம் செய்தனர்.

போரூர்,

போரூர் அடுத்த அய்யப்பன்தாங்கலில் தனியாருக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளது. இந்த நிலையில் குடியிருப்பு வளாகத்தில் சுற்றி திரிந்த நாய் ஒன்று அங்கு நடைபயிற்சி மேற்கொண்ட சிலரை நாய் ஒன்று கடித்து குதறியதில் 5-க்கும் மேற்பட்டோருக்கு காயம் ஏற்பட்டது.

இது தொடர்பாக குடியிருப்புவாசிகள் சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்த நிலையில் மாநகராட்சி ஊழியர்கள் நேற்று அடுக்குமாடி குடியிருப்பில் சுற்றி திரிந்த நாய்களை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

3 வாகனங்களில் வந்த ஊழியர்கள் நாய்களை பிடித்து கொண்டு வெளியே செல்ல முயன்ற நிலையில், அங்கு வந்த அடுக்குமாடி குடியிருப்பு வாசிகளில் சிலர் நாய்களை பிடித்து செல்லக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பிடித்த நாய்களை மாநகராட்சி ஊழியர்கள் அங்கேயே வாகனத்தில் இருந்து திறந்து விட்டனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்க்கு வந்த போரூர் போலீசார் குடியிருப்பு வளாகத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதையடுத்து, வேரொருநாள் குடியிருப்பு வளாகத்தில் சுற்றி திரியும் நாய்களை பிடிக்க வருவதாக மாநகராட்சி ஊழியர்கள் கூறி விட்டு சென்றனர்.

மேலும் செய்திகள்