< Back
மாநில செய்திகள்
தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி வலுவாக உள்ளது-மாணிக்கம்தாகூர் எம்.பி. பேட்டி
மதுரை
மாநில செய்திகள்

தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி வலுவாக உள்ளது-மாணிக்கம்தாகூர் எம்.பி. பேட்டி

தினத்தந்தி
|
2 Oct 2023 1:50 AM IST

தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி வலுவாக உள்ளது என்று மாணிக்கம்தாகூர் எம்.பி. கூறினார்.

தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி வலுவாக உள்ளது என்று மாணிக்கம்தாகூர் எம்.பி. கூறினார்.

சிவாஜி கணேசன் சிைலக்கு மாலை

சிவாஜி கணேசன் பிறந்த நாளை முன்னிட்டு மதுரை நீதிமன்றம் அருகே உள்ள அவரது சிலைக்கு காங்கிரஸ் கட்சியின் கலை பிரிவு சார்பில் மாநில செயலாளர் சந்திரசேகர் தலைமையில் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கார்த்திகேயன், ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலையில் மாணிக்கம் தாகூர் எம்.பி. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அதன் பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

பா.ஜ.க.வை பொறுத்தவரையில் இன்னும் அ.தி.மு.க.வுடன் அவர்களுக்குள் இருக்கும் கூட்டணி முறியவில்லை. விளம்பரத்திற்காக அண்ணாமலையை பேச விட்டு உள்ளார்கள்.

அண்ணாமலை அரவக்குறிச்சியில் போட்டியிட்டு முதல் முறையாக தோல்வியுற்றார். மீண்டும் அரவக்குறிச்சியில் போட்டியிட்டு அவர் வெற்றி பெறட்டும். அதன் பின்பு அவர் முதல்-அமைச்சர் ஆவதை பற்றி பார்ப்போம்.

தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி

தி.மு.க., காங்கிரஸ் கூட்டணியை பொறுத்தவரை வலுவாக உள்ளது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், ராகுல்காந்தி இணைந்து இந்தியா கூட்டணி உருவெடுத்து பலமாக உள்ளது. இந்தியா கூட்டணி வெற்றி பெறும். அப்போது நரேந்திரமோடி, அமித்ஷா, அதானி, ஆகியோர் விசாரணை கமிஷனுக்கு உட்படுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார். இதில் வக்கீல் ராஜபிரசாத், தங்கவேல், காமராஜ், சையது பாபு, மகளிர் அணி மாநகர் தலைவர் ஷானவாஸ்பேகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்